துயரங்களை ஒருபோதும் நேராக நோக்காதவன்,
மகிழ்ச்சியை அடையத் தகுதி பெறாதவன்
கடவுளிடம் சொல்லாதே,
உன் பிரச்சனைகள் எவ்வளவு பெரியது என்று..
உன் பிரச்சனைகளிடம் சொல்,
உன் கடவுள் எவ்வளவு பெரியவர் என்று..
எந்நேரமும் உதடுகளில்
ஒரு புன்னகையை வைத்திருங்கள்.
அது தருகிற தன்னம்பிக்கை
வேறு எங்கேயும் கிடைக்காது!!
நேர்மையும்,நல்லெண்ணமும்
இருக்கின்றபோதெல்லாம் இறைவனின்..
உதவியும் உள்ளது.
துன்பம் வரும் போதும்,
இன்பம் வரும் போதும் கூடவே இருக்கும்
ஒரே நண்பன் நமது உழைப்பு மட்டும் தான்
படகு கரை சேர்வதுக்கு துடுப்பு
மட்டுமே உதவும்..
அது போல் நம் வாழ்வில் கரை சேர்வதுக்கு
உழைப்பு மட்டுமே உதவும்..
அலைகள் ஓய்ந்த பிறகு தான்,
கடலில் குளிப்பதென்பது முடியாது.
நீந்தத் தெரிந்த பிறகே,
நீரில் இறங்குவது என்பதும் இயலாது.
வாழ்க்கையும் அப்படித்தான்..
காகிதம் மேலே பறப்பது காற்றடிப்பதால்..
ஆனால்..
பறவை மேலே பறப்பது அதன் முயற்சியால்..
அதனால்..
உழைப்பை நம்புங்கள்..
அது மட்டுமே வெற்றியை கொண்டு வரும்…
No Comment! Be the first one.