வெற்றியுன் முயற்சிக் கேற்ப
வீழ்ச்சியுன் செயலுக் கேற்ப
பற்றிடும் கொள்கை தன்னில்
பதித்திடு சிந்தை தன்னை!
இயலாதென்பது ஏது மில்லை
எழுநீ இலக்கு தொலைவிலில்லை
முயலா தொருங்கி கிடப்பாயானால்
முற்றும் மூடும் வாழ்கைப்பாதை!
வெற்றி யடைந்தோர் வழியைப்பாரு
விளக்கம் கிடைக்கும் நூற்றுக்குநூறு
பற்றி நடந்து பயணப்படு
பாட்டிலில்லை துயரக் கேடு!
No Comment! Be the first one.