வளைவோமில்லை வாழ்வின் நேரில்
வணங்கோம் ஒரு நாளும்
தலைவ னென்று தாழ்வோ மில்லை
தாழாதெம் தோளும்!
தமிழைத் தவிர தன்னிகரோடு
தரணியில் எதுவு மிலை
தமிழனென்ற தலைக் கெதிராய்
தக்கது ஒன்று மிலை!
ஆளும் திறனில் அசுரன் தமிழன்
அறிவார் மாநிலத் தாரும்
நீளும் வரலா ரொன்றில் நிலைக்கும்
நிறைவாய்த் தமிழன் பெயரும்!
உலகம் முழுதும் உள்ளவன் தமிழன்
ஒப்பிட வேறா ருண்டு
பலவும் கற்று பயிற்றுவ னவனே
பாடமும் அவன் தானே!