எப்பொழுதும் இனிக்குமவள்
எழுதவதை சிறப்புறுது புனைவு
அப்பப்பா அவளின்பக் கனவு
அவளின்றி இனிக்கு மெவ்விரவு?
மெட்டியொலி காதுகளை உசுப்பும்
மென்துகிலோ மெத்தையிலே பசப்பும்
அட்டியிலை யென்றுகை அணைக்கும்
அடிவயிற்றில் ஏதொன்று பிசைக்கும்!
நாணத்துடன் நங்கைமுகம் நடிக்கும்
நானருந்த செவ்விதழ்கள் துடிக்கும்
ஈனத்துடன் சுரமொன்று பிறக்கும்
இருட்டுறைய வெளிச்சம் கதவடைக்கும்!
மன்மதத்தேர் மனமிரண்டை சுமக்கும்
மலர்மணத்தை மலர்ந்தஉடல் பரப்பும்
கண்மயங்க கட்டில் ஒலிஎழுப்பும்
காலையிலே கண்நான்கும் பழுக்கும்!
இரவிரவும் இந்தகதை தொடரும்
இதற்கில்லை எந்தவொரு இடரும்
உறவுதனை வளர்க்குமிக் கலையே
உன்னதப் பேரின்ப நிலையே!
No Comment! Be the first one.