இருளின் பிடியில் தேசம்
இலட்சிய மாச்சு நாசம்
பொருளில் லாத வாழ்வு
பொழுதும் கூடுது தாழ்வு!
வாயைக் கொண்டு பிழைப்போன்
வளர்ச்சியில் இல்லை தேக்கம்
வாழும் ஏழை மக்கள்
வழியில் தானே தேக்கம்!
கால சுழற்சி கழிவா
கயமை நிலையின் உயர்வா
ஆளு வோரது தவறா
அடிமைத் தனத்தின் நிலையா!
வறுமைப் பிணியின் வாசம்
வல்லவினை கூற்றில் தேசம்
பொறுமை இனியும் கூடா
போகும் வாழ்வு கூடா!
புரட்சி யொன்று நடத்து
புயலை மனதில் புலர்த்து
வறண்டு போன வாழ்வில்
வளத்தைக் கூட்டி நிறுத்து!
இருளை கொஞ்சம் நகர்த்து
இலட்சிய வழியை அழைத்து
அருகில் வெற்றி இருக்கு
அம்முயற்சி ஒளியின் விளக்கு!