அவளுக் கென்று அழகிய கவிதை
அன்புடன் ஒன்று எழுதுகிறேன்
எவரும் எழுதா எழில்மிகு சிந்தில்
இலக்கிய மாகப் பகருகிறேன்!
எழுத்து இல்லை இலக்கண மில்லை
இலக்கிய மரபு சிறிதுமில்லை
முழுக்க முழுக்க முகிழ்த்திடும் அன்பே
முரணாயதிலே எதுவுமில்லை!
புரியாதெவர்க்கும் புரிவளாவளே
புதுமைமொழியைப் பூவறிவாள்
அறியாவகையில் அமைத்தநானும்
அதனின்மகிமை அணுவறிவேன்!
காலம் கடந்தும் கண்ணில் கருத்தில்
கவிதைவாழும் இதயத்தில்
நாளும் படிப்போம் நாங்கள் மட்டும்
நாளும்நாளும் உதயத்தில்!
No Comment! Be the first one.