வாழ்கை என்பது ஒருபயணம்
வருவதும் போவதும் ஒருமுறைதான்
வாழ்வதில் காண்பது அனுபவமே
வாழ்ந்து பாரதும் ஒருசுகமே!
வழிதனில் முள்ளு கல்லிருக்கும்
வற்றா துயர ஆறிருக்கும்
விழிதனில் சோகம் குடியிருக்கும்
விடியலில் கூட இருளிருக்கும்!
இடைஇடை ஏதோ மகிழ்விருக்கும்
இடுக்கினில் கொஞ்சம் புகழிருக்கும்
கடைதனில் வெறுமை நிறைந்திருக்கும்
கடனே என்ற முடிவிருக்கும்!
இதுதான்வாழ்க்கை இதுதான் பயணம்
இதுதான் வாழ்வியல் தத்துவமே
இதுதான்உறவு இதுவே நிகழ்வு
இதுதான் வாழ்வின் மொத்தமுமே!
No Comment! Be the first one.