தூக்கம் கெடும் துணை வருவார் அன்பு கெடும்
ஆக்கும் செயல்கெடும்
அறிவுக்கு மந்தம் வரும்
சீக்கால் உடல்கெடும்
சிகிச்சையால் செலவுகூடும்
நோக்கார் எவரும் நோகத்தான் பேச்சுவெழும்!
மரியாதை மாண்பிழக்கும்
மானிடமே தூற்றும்
உரிமை பறிபோகும்
ஊரு கதவடைக்கும்
பேருக்கு வாழுகின்ற
பிழைமட்டும் தொக்கிநிற்கும்
யாருக்காய் வாழுகிறோம் யாவருக்கும் விரக்திவரும்!
போதையில் மிதப்பவர்க்கு புரியாது இந்தகதை
பாதை மாறியொரு
பயணம் முடிவதனை
ஏதுமறியா இருக்கின்ற குடிகாரர்
சூதை அறிவாரோ சொல்லடி என்சிவசக்தி!
திசையெங்கும் மதுக்கடைகள்
திக்கெட்டும் போதை மயம்
வசைபாடும் தெருவாசி வார்த்தைகளைக் கொள்ளாது
வழக்கத்தைத் தொடருவதால்
வலு விழக்கும் சமுதாயம்!
No Comment! Be the first one.