இருமனம் கலந்த ம் ஆண்டுகள்
திருமணநாள் வாழ்த்துகள்!
இறைவன் கொடுத்த வரம்
இல்லாள் அமைவ தெல்லாம்
மறைகள் சொல்லுவது மந்திரத்தின் எதிரொலியே
குறைகள் ஏதுமின்றி கூடுகின்ற நாளிதுதான்
நிறையை நிச்சயிக்கும் நிம்மதிக்கு வழிவகுக்கும்!
அன்பில் ஒன்றிமனம் அறிவார்ந்து கூடுகையில்
என்பிலும் பேதம்வரா எந்நாளும் பெருமகிழ்வே
கண்ணும் இமையும்போல்
காவலுற முனைகையிலே
பின்னம் ஏதுமிலை பிறகேது துன்பநிலை!
நத்தை கூட்டுள்ளும் நலமாக வாழ்வமையும்
வித்தை பெரிதில்லை விந்தையிதில் ஏதுமில்லை
ஒத்த மனமிருந்தால் ஓரிலையில் உறங்கிடலாம்
சித்தத் தெளிவேற்றால் சிறப்படையும் இல்லறமே!
அறத்தை அகமுடையாள் அவள்வழியில் கணவனுமே
திறத்தை தேர்விருத்தி தேடுங்கால் வாழ்வியலில்
புறத்தை வெல்லுகின்ற புத்தொளிகள் தோன்ற
வரத்தைப் பெறுவதுதான் வாழ்வியலில் திருமணமும்!
அண்ணனும் அண்ணியும் அவ்வழியில் மெய்யிணைந்த
அருமைத் திருநாளு அழகொளிரும் பெருநாளு
இன்றி ருபத்தைந்து இணைவாண்டு
ஈவிருவர் காணுகிற
ஈடில்லா ஓர்நாளு
என்றன் மனவாழ்த்து
இருவருக்கும் ஆனையூரான் ஆசி
மன்றில் தமிழ்போல மாமண்ணில் வாழ்ந்திடுவீர்
No Comment! Be the first one.