ஆழ்ந்த உறக்கம் ஆசை விலக
ஆங்கொரு சொர்க்கம் கனவினிலே
ஏழ்மை யில்லை இளமை முதுமை
என்று மில்லா நிலையினிலே!
போட்டி யில்லை பொறாமை யில்லை
புகழ இகழ எவருமில்லை
காட்டிக் கொடுக்கும் கயவ ரில்லை
கசப்பு இனிப்பு எதுவுமில்லை !
இன்று பிறந்த இனியப் பொழுது
இதற்கு நிகரு ஏதுண்டு
என்றும் இதுபோல் இருந்து விட்டால்
எங்கே வாழ்வில் பழுதுண்டு?
ஆழ்ந்து உறங்க அத்தனை இன்பம்
அனுபவித்தாலே அது புரியும்
வாழ்ந்த அனுபவ வழியைக் கொண்டு
வழங்குது பாரு என்னறிவும்!
No Comment! Be the first one.