புன்னகைத்தால் வண்டு வரும்
பூத்த மது மலரென்று
என்னகத்தில் கைதுவந்த அழகுமுகம் பூச்செண்டு
கண்ணகத்து கனவுகளில் காலமெலாம் கற்கண்டு
கனியிதழில் காணுகிறேன் காவியத்தின் பலதுண்டு!
படிக்கவரும் ஆசைகளை பாவையவள் உள்கொண்டு
தடுத்த தகலா தந்திடனும் தன்னார்வ நிலையுண்டு
எடுத்தியம்ப காத்திருக்கேன் என்னிலலை மிகவுண்டு
எப்போதும் என்மொழிக்கு இவளிடமே பொருளுண்டு!
கள்ளிருக்கும் போதையதை காணுகிறேன் இவளிடத்தில்
உள்ளிருக்கும் நோயுணர்த்த உரையெழுத விரும்புகிறேன்
சொல்லிருக்கு என்னிடத்தில்
சொல்லவிலை யாருமிதை
சொல்லுகையில் புரியுமந்த சொக்கனது காதல்கதை!
விருப்பத்தை விருத்தத்தில் விளக்கிடவா கம்பனைப்போல்
விருந்தொன்று படைக்கவா வித்தகராம் கவியரசாய்
கருத்துரைப்பேன் காமத்தை கண்டதிரு வள்ளுவனாய்
பொறுத்திரு பெண்ணே பொழுதொன்று கூடிவரும்!
No Comment! Be the first one.