ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு ஆசை
உயிர் கொண்டெழுது இல்லை ஓசை
எவ்வா றதனை கடந்து செல்ல
செவ்வன் இதனை சிறப்புடன் வெல்ல?
உள்ளம் பாவம் உளைச்சலில் கிடக்கு
உற்பத்தி செய்தது சிந்தையின் வழக்கு
எல்லாம் நடப்பது இறைவனின் செயலே
இதனை கடந்திடல் இறைவனின் அருளே!
நல்லதும் கெட்டதும் நாயகன் எண்ணம்
நமக்குள் நடத்துதல் நன்றது திண்ணம்
வல்லா செயலும் வலிமிகு நிலையும்
உள்ளே விளைவது
உமையவன் கடனே!
நாயகன் ஆசையை நாமா திருத்த
வாயகப் புலம்பல் வழி வகுக்காது
தாயவன் தந்தை தானென உள்ளவன்
தர்மத்தை மறவான்
தரணியில் என்றும்!
No Comment! Be the first one.