வாயைக் கொண்டு வணிகம் நடத்தும்
வஞ்சக மனிதக் கூட்டம்
மாயம் காட்டி மயக்க மூட்டி
மண்ணில் போடுது ஆட்டம்
கடையு மில்லை முதலு மில்லை
காணும் லாபம் அதிகம்
தடையே இல்லை தன்செயல் செய்திட
தக்க அமையுது யோகம்!
அடுத்தவ னுழைப்பில் அடைகிற லாபம்
அவர்கள் அடையும் உயரம்
அடுத்தே பிடுங்கும் அத்தனை லாபமும்
அன்றாடங் காய்ச்சியின் துயரம்!
கொடுத்தான் இறைவன் குவலய வாழ்வை
கூடி வாழ்ந்திடத் தானே
கெடுத்தார் மனிதரில் கெட்டவர் சிலரும்
கேட்க தெய்வமு மில்லை!
No Comment! Be the first one.