விந்தையெம் உலகிது
விழிப்புடன் இருக்கணும்
கந்தையும் களவு போகும்–மானிட
சந்தையில் விசித்திரம்
சத்தியம் நேர்மையும்
சாக்கடை தன்னில் மூழ்கும்!
மந்தையில் மனிதனை மகிழ்வுடன் படைத்தவன்
மறந்துமே உறங்கிப் போனான்–அவன்
சிந்தையில் சேர்த்திடா சிறப்பறி ஒன்றைதான்
சித்தென ஒளிக்க லானான்!
தட்பமும் வெட்பமும் தடம்மாறிப் போனதை
தப்பிலை சொல்ல மாட்டேன்–உளம்
உட்பட மானிட உன்னத மாற்றத்தை
ஒப்புமே கொள்ள மாட்டேன்!
செப்புமோர் வகையிலே ஜெயப்படும் சிலரது
சிந்தையில் அழுக்கு மூட்டை–எவர்
ஒப்புவார் யான்சொல
உலகதே உள்ளது
ஓராயிரம் தவறின் ஓட்டை
No Comment! Be the first one.