வானளவு வலியிருக்கும்
வலியளவில் மனம்கொதிக்கும்
தேனளவு சுவைமாறி
தேடிவந்த கசப்பிருக்கும்
அவனிடமே விடையிருக்கும்
அவன்வரவு மறைவிருக்கும்
ஆனாலும் அவனிடம்கேள்
அதற்கேற்ற விடையிருக்கும்!
ஓரளவு வைத்தவனின் உள்ளுணர்வை யாரறிவார்
சீரளவு வைத்திருந்தால் சிறப்பளவு ஏதறிவார்
பாரளவில் ஆளுகின்ற பரந்தாமன் ஆளுகையில்
யாரளவு வரையறுக்க யாதுமவன் மனஅளவே!
No Comment! Be the first one.