கையிலே உலகம் கண்டான்
கருத்திலே இருளைக் கொண்டான்
பொய்யிலே வாழ்வைக் கண்டான்
புதுமையில் அழிவைக் கொண்டான்
மெய்யிலா மேனி இன்பம்
மிகுந்தநல் மகிழ்ச்சி என்றான்
ஐயமே உன்னைக் கொண்டு
அழிவதைத் தேடிக் கொண்டான்!
பிறந்ததே வாழ என்ற
பிறப்புண்மை அறியா நித்தம்
சிறந்ததே பொருளு மென்று
செல்லவே கற்றுக் கொண்டான்
அறந்தனை அகற்றி வைத்தான்
அல்லாது நல்ல தென்றான்
புறந்தனை நோக்கி நோக்கி
போயினன் மடமைக் குள்ளே
No Comment! Be the first one.