என் அம்மா கட்டி தொட்டில்கள்!

என் அம்மா கட்டி தொட்டில்கள்!
எத்தனை எத்தனை தொட்டில்கள்
எனக்காக நீ கட்டினாய் !
முதல் தொட்டில்
உன் கருவறை !
இரண்டாம் தொட்டில்
உன் மடியில் !
மூன்றாம் தொட்டில்
உன் நாரியில் !
இவைகள் மட்டுமா ?
குளிக்கையில் உன் கால்கள் மீது
ஓர் தொட்டில் !
அனைக்கையில் உன் நெஞ்சில்
ஓர் தொட்டில் !
சுமக்கையில் உன் முதுகில்
ஓர் தொட்டில் !
இவ்வாறு எத்தனை ?
மரத்தில் ஓர் தொட்டில்,
சீமேந்து தரை மீது போர்வை போர்த்தி
அதன் மீது ஓர் தொட்டில் !
எப்படி அம்மா கற்றுக்கொண்டாய் ?
கடவுளிடம் நேரடியாக பெற்றுக்கொண்டாயா?