என் செய்திசேகரிப்பு பயணம்
உன்னை கடக்கும் வேளை அது
கண் பார்த்து கொண்டோம்…..
இப்படி தான் காதல் தொடங்குமென்று
நானும் நினைக்கவில்லை….
நிலத்தடி நீர் உறுஞ்சும்
கருவேலம் செடி போல ஆழ பதிந்து
நினைவுகளில் ஆழ் கொண்டாய்….
பெண்களை கானும் போது ஏற்படும்
ஈர்ப்பென்றேன் எண்ணினேன் உன் விழியின் சந்திப்பை….
உன் காந்த கண்ணின் கருவிழியில்
கரைந்து போவேன் என்று நினைக்கவில்லையே……
நீ பேசிய கண் ஜாடை அதை எப்பெண்ணிடமும் கண்டதில்லையே
உன் சிரிப்பெனும் சிலந்தி வலையில்
சிக்குண்டு போனதேனோ……
வாழ்ந்தால் உன்னோடு என்று
வாள் ஏந்தி நிற்கிறேன்….
பூமியில் உயிர் உள்ள வரை
என்று என் வாழ்க்கை
சொன்னேன்
அப்பா நீங்கள் கண் குருடனாக இருந்திருந்தால் தப்பி
இருக்கலாம் இந்த கொடுமை இருந்து என்றான் என் மகன்
No Comment! Be the first one.