அம்மா ஆனையூர் அம்மா

அம்மா ஆனையூர் அம்மா
அகிலம் போற்றும் அடைக்கல அம்மா
வரங்கள் உந்தன் விழியில்
பணிவு உம் வாழ்க்கையில்
பாசம் எம் ஊர் மாந்தரில்
பாம்பின் தலை நசுக்கி
ஆனையூரில் பசாசை விரட்டி
காட்சி கொடுத்து உம் அன்பு மகனுடன் குடியேறியவளே
அடைக்கல அம்மா
தங்கத் தேரில் எம் ஊர் சுற்றிவரும்
தாரகையே
விண்மீன்களை தலையில் முடிசூடி
தலைமகனை மடிதாங்கி எம் ஊர்
காக்கும் ஆனையூர் அரசியே ஆரோக்கியதாயே
உன் அன்பின் சுவைகண்டு அமிர்தமும்
கசக்குதம்மா
தாயின் அரவனைப்புக் கண்டு
அலையும் பிசுக்குதம்மா
குண்டு மழை யுத்தத்திலும் எம் ஊரில்
குண்டூசி சேதம் இன்றி காத்தவளே
உனை கும்பிட்டு சென்றோர் இன்று
கொடிகட்டி பறகிறார்கள் தாயே
ஆனையூரின் அடைக்கலமே
மடுத்திருப்பதியின் மணி மகுடமே
பண்டத்தரிப்பின் காட்சியே
கிழ்வானின் வீண்மீனே
தஞ்சம் என்று உன் பாதம் வந்தால்
அஞ்சாதே என உன் மஞ்சத்தில்
என்றும் சுமப்பவளே
ஜென்ம பாவம் இன்றி உதித்தவளே
இதே உம் அடிமை என இறை சித்தம்
ஏற்றவளே ஆடைக்கல அம்மா
மட்டியிட்டு கேட்கிறேன் மானிடர்
எம்மை பாதுகாத்து கொடிய நோய்
தீர எமக்காய் மகனிடம் பரிந்து பேசுமம்மா
ஆமென்
உன் குழந்தை
ஆனையூரான்