உள்ளொன்றும் புறமொன்றும்
உடுத்திய வேடத்தை
உணருவார் எவரு மில்லை
கள்ளமும் கபடமும்
களவாடும் குணத்தையும்
கண்டவர் வென்ற தில்லை!
சொல்லுவர் செயலதில் சொற்பமும் நடந்திடார்
சொல்லியும் பயனு மில்லை
வெல்லுவர் மௌனமே வெற்றியை ஈட்டிடும்
விவேக மவரின் எல்லை!
காலமோ நேரமோ கனிவது என்பது
கண்டிடும் சலனத் தாலே
நாளது கிழமைகள் நம்பிக்கை தந்திட
நாடுவர் நடப்பது யோகத்தாலே!
முயற்சியும் பயிற்சியும் முறைப்படி யுழைத்தலும்
முன்னதில் கனியு மாகும்
அயர்விலா ஓட்டமும் அடைந்திடும் வெற்றியும்
அமைகின்ற இனிமையாகும்!
No Comment! Be the first one.