வன்மம் உதட்டில் சிரிப்பு
கொல்லும் நச்சு இதுவாகும்–அதைத்
தெள்ளத் தெளிய தெரிந்து கொண்டால்
தேடும் நட்பின் விடையாகும்!
எதிரும் புதிரும் இணையு மென்பது
எப்படி மண்ணில் சரியாகும்–ஒரு
சதியின் பின்னல் சாகச மென்பது
சத்திய முரைக்கும் தெளிவாகும்!
குட்டக் குட்ட குனிவார் என்பது
குமுறும் எரிமலை நிலையாகும்–ஒருநாள்
எட்டும் குட்ட எழுந்து வருவது
இவரின் வண்ணக் கலையாகும்!
நட்பு என்பது
நல்லது கெட்டது
நாடா ஒருவித முறையாகும்–எவரும்
சுட்டிக் காட்டியும் சுருங்கா தென்பது
சுருங்கச் சொன்னால் விதியாகும்!
No Comment! Be the first one.