கையில் மலர்கள் கனவோ விழியில்
ஐயம் கொஞ்சம் உள்ளத்தில்
பொய்யு மில்லை மெய்யுமி ல்லை
புதுமைக் கவிதை நெஞ்சத்தில் !
வருவா யென்று வசந்தம் கூறுது
வருகை வாசம் வரவில்லை
வரவின் தயக்கம் வந்தது எதனால்
வந்து சொல்லு என்னெல்லை!
தவியாய் தவிக்கும் தவிப்பை போக்கிட
தந்தே அருளு ஒருசொல்லை
கவியா யிருக்கும் கம்பன் கனவை
கலைத்திட வேண்டாமதுத் தொல்லை!
இருளைப் போற்ற இணைந்திடு குயிலே
இன்ப கீதம் எழவேண்டும்
வருகிற காமன் வரவில் கொஞ்சம்
வலியச் சுருதி பெறவேண்டும்!
மெட்டி யொலித்திட மேனி குலுங்கிட
கிட்டெ வாடி பக்கத்தில்
ஒட்டி கலந்திட உறவில் மிதந்திட
ஒன்றிப் போவோம் சொர்க்கத்தில்!
கரையும் இரவு கரையா யிருக்க
காதல் ஓட்டம் தொடரட்டும்
சரியாய் சொன்னால் சரிகமப
சந்த ராகஒலிதனும் மிளிரட்டும்
No Comment! Be the first one.