வேடிக்கைப் பார்க்க இயலாது-என்
வேதனை பலருக்குப் புரியாது
ஓடி ஒளிந்திடப் போவதில்லை-நான்
ஓற்றை யெனினும் கவலையில்லை!
வழக்கு வருமெனில் சந்திப்பெனே-ஒரு
வம்பென்று வந்தாலும் வளைந்திடனே
கூடியும் நிற்போர்கள் ஒதுங்கிடினும்-அந்த
கூட்டத்துள் கூட்டமாய் பதுங்கிடனே!
தட்டித்தான் கேட்கிறேன் தவறுதனை-கயவர்
தன்னலப் போக்கினால் விளையும் வினை
ஒட்டியே வாழ்ந்திட எண்ணமிலை-எந்த
உயர்வி னுக்காவும் பண்ணவில்லை!
சத்தியம் தோற்றிடா நாள்வரையில்–நான்
சந்திக்க நினைக்கும் வெற்றிவரை
நித்தமும் என்கணை பாயுமடா–மண்ணில்
நிச்சயம் எனக்கு தாயமடா!
No Comment! Be the first one.