உறங்கப் படுத்தால் உசுப்புது உணர்வு
உள்ளம் முழுதும் உறவின் கனவு
சிரங்கு பிடித்த ஜீவனைப் போல
வறண்டுது வாலிப வாழ்வின் நினைவு!
பஞ்ச மின்றி பாடல் வரிகள்
பாவையைப் போற்றும் பலவித நெறிகள்
கொஞ்சும் முகத்தில் கோல மெழுத
குதிக்குது சிந்தையில் கோடி விரல்கள்!
காதல் தத்துவ கனிச்சா ரருந்திபின்
ஈது விளம்பிட எனக்குள் துடிப்பு
மாதவள் வந்து மஞ்சம் விரித்தால்
மாதவ வெற்றி மனதினில் கூடும்!
படுத்தும் பாடு பாவையின் அழகு
படுத்தி எடுக்குது தேவையின் நுழைவு
அடுத்தோர் வினையை அதுவும் தடுக்குது
அதுதான் ஆசை அவளின் விசப்பிது!