கையலுக்க காலலுக்க கடிதுழைக்கும் தோழனுக்கு
கைநிறைய கொடுத்திடுங்கள் கூலி-அவன்
மெய்வளர்க்க பொய்யழிக்க மேதினியில் தான்செழிக்க
பைகனத்தால் வறுமையது காலி!
அவனுழைப்பில் ஆனதுதான் அவனிதனின் பெருவளர்ச்சி
அவனிலையேல் அணுவளவும் உயரா–சிறு
கவலையதும் கண்டுமன கண்கலங்கி நின்றாலே
காசினியில் நம்வாழ்வு பெயரா!
அவன்வீடு அவன்குடும்பம் அவனுக்கென ஆசையுண்டு
அத்தனைக்கும் அடித்தளமே உழைப்பு –அந்த
மகன் மனதை புரிந்து கொண்டால்
மகிழ்ச்சிக்கேது இங்குப் பேரிழப்பு!
மாளிகையோ கோபுரமோ மாபெரும் சொத்துகளோ
மாற்றமுறும் மண்ணில் சிலநாளில்–ஒரு
போலித்தனம் போர்த்தியிங்கு போய்முடியும் பொழுதுதனை
போக்கசுமை தூக்காதீர் தோளில்!
No Comment! Be the first one.