தீங்கனியாய் தித்திக்கும் தேவமொழி எத்திக்கும்
ஈங்கிதுபோல் எம்மொழியும் இல்லையுணர் பேருலகில்
பாங்கினிய பைந்தமிழை பாரெல்லாம் போற்றுகின்றார்
தாங்கு தமிழே தலை!
தலையாம் தமிழ்மொழிபோல் தாரணியில் வேறு
இலையாம் உணருவீர் இவ்வுலகக் கூற்று
கலையாம் கனித்தமிழே கற்கண்டு தேனே
நிலைகொண்ட செம்மொழி யாள்!
செம்மொழியில் செப்பு சிறப்படையும் பேரறிவு
எம்மொழிக்கும் இச்சிறப்பு இல்லை எனஉணர்
அம்மொழிதான் தாயாரும் அன்றன்று ஊட்டியது
நம்மால் வளரும் தமிழ்!
No Comment! Be the first one.