காலத்தின் எதிர்காலம் கவலைக்கு வருங்காலம்
ஆளுமிப் பூமிதான்
ஆகிடும் அலங்கோலம்
நாளுக்கு நாள்வெப்பம் நாற்றிசை உயர்வேறும்
கோள்களில் பெருமாற்றம்
கூடவே அரங்கேறும்!
நீர்நிலை நிலைப்பாடு நீடிக்கா வறண்டிடும்
கார்நிலை வெளிப்பாடு கணக்கின்றி மழைகொட்டும்
வேர்விடும் மரங்களும் வெளுத்தழுகிப் பாழாகும்
சீரின்றி இயற்கையும் சினத்தோடு விளையாடும்!
கடல்மட்டம் கரைதாண்டும் காற்றின் வேகம்
தடம்மாறிப் புயலாகும் தரையும் பாழே
உடன்கூடும் பூகம்பம் உலகை சாய்க்கும்
உடலுயிர் ஆவியும்
உலகைத் தேடும்!
வருங்கால நிகழ்விது வாரா மாற்றம்
வரப்போகும் இந்நிலைக்கு வழியை விட்டோம்
ஒருகாலும் இதற்காக ஒருவ ரேணும்
ஒருநிமிடம் யோசித்து உரைப் பாருண்டா!
No Comment! Be the first one.