மூப்புத் திரையை முழுதும் விரித்தான்
முடியும் வெள்ளை யானது
காப்பிட இயலா காளைப் பருவம்
கண்களில் நிழலு மாடுது!
ஏய்க்கும் கலையை இறைவனை விடவும்
எவர்தான் கூட அறிவது
வாய்க்கும் பருவம் வாழ்ந்திட வேண்டும்
வாய்ப்பு மிகவும் அரியது!
கொடுப்பதும் பறிப்பதும்
கோமகன் வித்தை
கொள்பவர் புரிதல் அவசியம்
தடுப்பதற் கில்லை தம்பிரான் கணக்கை
தான் பலிக்காது ஜோசியம்!
அவனே பிறப்பு அவனே இறப்பு
அவனே ஆட்ட நாயகன்
சிவனே யல்லால் செய்வினை யேது
சிறப்புற செப்பிடு தாயவன்!
No Comment! Be the first one.