விட்டுக் கொடுத்தவன் ராமன்
விடாது கெட்டவன் ராவணன்
கொட்டிக் கொடுத்தவன் கர்ணன்
கொடுக்காது அழிப்பவன் எமனே!
இன்று மிப்பாத்திரம் பேசும்
இரக்க மற்றோர்தனை ஏசும்
நன்றது என்றறன்றும் வாழும்
நல்லதல் லாதவைதானே கீழும்!
ஆளுவர் சிறப்பு அறமே
ஆட்சியைப் போற்றுதல் வரமே
மீளுவ தெப்படி இனுமே
மீட்டிட வேண்டும் நற்குணமே!
கேளு கிடைத்திடும் பொய்யே
கேப்பையில் எப்படி நெய்யே
கோலு விரல்களில் உண்டு
குரங்கை அடக்கிடு கண்டு!
மாற்ற முன்னேற்ற கணக்கு
மதிதெளி விடையுண் டுனக்கு
ஏற்றத்துக் கானது ஏணி
இரங்கினா லுனக்கு(பாழ்) கேணி!
தேர்ந்தெடு தீயவை கழித்து
தீந்தமிழ் நாட்டவர் ஓர்த்து
கூர்ந்திடு உனது ஓட்டு
குவலய வெற்றியை நாட்டு!
No Comment! Be the first one.