அறிவார்ந்த நல்லோர்கள் ஆளட்டும் குறைசொல்லி
சிறிதாக்க வேண்டாமே உள்ளம்–ஒரு
நிறைவார்ந்த நெறியோடு நீண்டநாள் அனுபவம்
நிச்சயம் காணாது பள்ளம்!
ஆக்கமும் ஊக்கமும் அளித்திட முன்வாரீர்
அமையட்டும் அமைதியின் சூழல்–எந்த
தேக்கமோ நீக்கமோ திருத்தத்தை ஒளிரட்டும்
திசைகளில் காணாது ஊழல்!
தேனள்ளி வருவோனை திண்ணத்தான் தூண்டிடும்
தித்திப்பு எனுமந்த சுவையும்–அவர்
வானொத்த நிலையென்றும் வளைந்திட நெளிந்திட
வருவாரே எத்திரு சபையும்!
இயல்பென்ற இருப்பொன்று இருக்கின்ற வரையிங்கு
இன்பமும் துன்பமும் இருக்கும்–எந்த
முயல்வெற்றி கண்டாலும் முடிவல்ல ஈதொன்று
முயன்றிட முயன்றிட மாறும்!
No Comment! Be the first one.