என்கனவை கலைத்து விளையாட
என்னிரவை கலைக்க முயலாதீர்
என்மனதை நிரப்பும் மகிழ்வோடு
எந்தபகையும் இணைத்து மகிழாதீர்!
என்உறவில் கலக்கும் உறவோடு
இடையில் பிரிவை நிறுத்தாதீர்
என்உள்ள வெளியின் அன்போடு
எந்தவிஷமும் கலக்க எண்ணாதீர்!
என்துயரப் பொழுதின் கண்ணீரை
எவரும் துடைக்க விழையாதீர்
என்அகர வரிசையிலது ஒன்று
எதற்கு அதற்கு தடையென்று!
எனக்கென உள்ள விதியேட்டை
ஏளனம் நீயும் செய்யாதீர்
கணக்குகள் சரியே பிழையில்லை
கடவுள் அறிவான் அவ்வெல்லை!
No Comment! Be the first one.