ஈழ(ம்)நாடு

 

புலிகளை வென்றதாக பொய்மாயை உண்மையில்லை
எலிகளா புலியை வெல்லும்; இது
ஏற்பற் கில்லா வாதம்!

நரிகளின் தந்திரத்தால் நாடது பாழுமாச்சு
நம் தமிழ் மறவர் கூட்டம்
நரிகளால் சிதறிப் போச்சு!

தோல்வியா தமிழன் தோள்தனில் அமரக்கூடும்
நாலுமே தெரிந்தோனுக்கு நாடுமா தோல்வி யிங்கு!

தமிழனை வென்றானென்ற சரித்திரம் ஏதுமில்லை
தமிழனே வென்றானென்று சான்றுகள் பலவுமுண்டு!

காலத்தால் திரும்பும் காற்று நம்
கைகளின் கட்ட விழ்த்துப் போடும்
ஆளத்தான் பிறந்த அருந்தமிழ் மறவர்கூட்டம்
அடைந்திடும் ஈழ(ம்)நாடு!