கன்னம் சிவந்தது மாம்பழமாய்
கனியிதழ் மீதில் முத்தமிட
வண்ண மடைந்தது எழிற் முகமும்
வருடி மகிழ ஐவிரலும்
கண்ணில் புலர்ந்தது காமரசம்
கனவை புலர்த்துது
ஈரமுற
என்னில் மலர்ந்தது மன்மதமும்
எழுந்து நின்றது போர்குணமும்!
உணர்வின் வடிகால் உடலிடையே
உணர்ந்து கூடல் ஒருமுறையே
அனலும் குளிரும் அருகருகே
அணைப்பில் பெருகும் அதிரசமே
தனந்தரும் தமிழாள் தந்துவக்க
தத்துவ ஞானம் மெய்பிறக்க
மனந் தரும்போதை மகிழ்வளிக்க
மண்ணில் பிறஎது சுகமளக்க?
உண்டு வளர்த்த உடல்
ஊனுணர்ந்து வாழும் உயிர்
கொண்டு வந்ததேது மில்லை
கொண்டு செல்ல ஒன்று மில்லை
இன்று இருப்ப துண்மை
இடைநிகழ்வு யாதும் பொய்யே
என்று வரை நீளுமிந்த
இம்மை வாழ்வு சொல்லுவரோ!
அறியா புதிர் வாழ்வு
அறிந்தி ருந்தால் ஏதுசுகம்
தெரியாது இருக்கும் வரை
தெய்வத்தை நாடும் மனம்
புரியாது உள்ள உண்மை
பூஜியத்தின் தன்மை யதே
ஒருவாறு வாழ்வ மைப்பு
ஓரதி சயத்தின் சூத்திரமே