இமயம் உயரம் ஏறுதல் எளிது
அமையும் உணர்வை ஆள்வது பொறுத்து
சமயம் சாதகம் சறுக்கச் செய்யும்
சமயோ ஜிதந்தான் சாதனை பண்ணும்!
துணிவு உனக்கு தோழமை வலிமை
தோள்தனை உயர்த்த தோன்றா கீழ்மை
பணிவும் கனிவும் பண்பின் உச்சம்
பணியா நிமிர்வு பரிகச எச்சம்!
துவளா திருந்தால் துயரும் நெருங்கா
துவளும் பொழுது துலங்கா தெதுவும்
எவரும் பயத்தை ஏற்று பிடித்தால்
எதிலும் வெற்றி ஏக பூஜியம்!
No Comment! Be the first one.