தலை வணங்குவோம் மே 18

கண்ணீரிலும் கரையாத சோகம்
காதுக்குள் விழுந்திட்ட நஞ்சு சத்தம்
புண்ணாக மனதுக்குள் காயம்
எண்ணற்ற எண்ணிக்கை கொலையும்!

முள்ளிவாய் நிறைந்துமே நாற்றம்
மூடிய உடல்களின் திட்டு
கள்ளமாய் கண்டனர் வெற்றி
எல்லாமும் அந்நாளின் முற்று!

துயரத்தில் ஈழமோ அந்திமம்
துடுப்பற்ற படகென ஈழ மக்கள்
வஞ்சக நிலையில் வேட்டை
தமிழ்ப்புலி யாவுமே மவுனம்!

எஞ்சிய உயிர்களும் பிழைத்திட
இடங்கண்டு பிரிந்தன தனித்துமே
மிஞ்சிய சிலரையும் அடைத்தனர்
ஊசி நஞ்சு கொலையும் உள்ளே!

ஆண்டுகள் உருண்டது மண்ணிலே
ஆனாலும் திரும்பலே வசந்தமும்
வேண்டுவோம் இனியுள உயிரெனும்
இறைகாக்க வேண்டுமிவ் உலகிலே!

நினைவு நாள் பதினெட்டு
நிகழ்ந்ததோ கல் வெட்டு
தனை தந்த தமிழ் தலைவனை
தலைவணங்கு ஒரு எட்டு!