பாடுகிறேன் ஒரு பாட்டு!

 

பாடுகிறேன் ஒரு பாட்டு
பைந்தமிழ் மெல்லிசை சேர்த்து
ஈடிலை அதற்கு எதுவும்
எம்மன மாயும் உருகும்

சேற்றினில் நகரும் உழவும்
சிறகினில் மிளிரும் வலியும்
காற்றினில் தவழும் குளிரும்
கைகளில் ஒளிரும் உழைப்பும்

மனத்தை வருடும் அன்பும்
மதியை உயர்த்தும் தெளிவும்
இனத்தை பெருக்கும் தமிழும்
ஈசனை வேண்டும் விதியும்

போற்றி எழுதினேன் பாரு
புதுமை யமைந்த கூறு
ஆற்றும் கடமையே எனக்கு
அறிவானமே எந்தன் இலக்கு