கருணையின் வடிவம்

கருணையின் வடிவம்

அன்னையோர் தட்டிலும் பொன்னையோர் தட்டிலும்
அளவிடத் தூக்கிப் பார்த்தால்
சின்னதாய் பொன்னுமே சிந்தையு மெண்ணுமே!

உன்னையும் என்னையும்
உயிருறத் தன்னையே
மண்ணில் வதைத்தவள்
மனதிலேத் துதித்தவள்
கண்ணிலே உயிருமாட
கைகளில் போட்டவள்
கருணையின் வடிவமாய்
கடவுளு மானவள்!

பத்தொரு திங்களாய்
பட்டுமே வேதனை
முத்தெனப் புவிமடி
முட்டிட பிள்ளையும்
சத்தென உண்டவள்
சளிதனை ஏற்றவள்
இற்றரை வாழும் இனிய தெய்வம்!

ஈடவள் தியாகத்தை
எதுவுமே நிரப்பாது
தேடவள் காலடி
திருப்பூட்டு இன்னாளில்
அன்னையர் தினத்தினில்
அவளுக்கு மரியாதை
சின்னதாய் செய்திடு
சேவித்து ஒருநொடி!