மடியில் சுமந்து ..
வடிவம் தந்து …
மாதம் தசமும் சுமந்து ..
வலியும் ஏற்று …
ஜனிக்கவும் வைத்து …
உதிரம் உருக்கி ..
பாலாய் கொடுத்து …
ஊனும் கொடுத்து ..
உறக்கம் தொலைத்து ….
நெஞ்சில் சுமந்து ..
கணமதில் மகிழ்ந்து …
இமை போல் காத்து …
அன்பே பொழிந்து …
வளர நீ மகிழ்ந்து ..
என்றும் நெஞ்சில் சுமக்கும் …
என்ன செய்தேன் தவமோ ..
உன் மகவாய் பிறக்க …
உயிருக்குள் அடைக்காத்து
உதிரத்தை பாலாக்கி
பாசத்தில் தாலாட்டி
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து
நமக்காகவே
வாழும் அன்பு
தெய்வம் அன்னை
கடல் நீரை
கடன் வாங்கி
கண்கொண்டு அழுதாலும்
நான் சொல்லும்
நன்றிக்கு போதாதம்மா
அன்னையர் தின
வாழ்த்துக்கள்
ஆனையூரான்
No Comment! Be the first one.