எதிரில் எதிரிகள் இல்லை என்று
கர்வம் கொண்ட வேளையில்.
காலடியிலேயே துரோகிகள் இருப்பதை
உணராமல் விட்டு விடுகிறோம்
புட்டு வேண்டும் என்றால்
மாவு வெந்து தான் ஆகணும்.
பக்குவம் வேண்டும் என்றால்
வாழ்க்கையில் நொந்து தான் ஆகணும்.
மகிழ்ச்சி என்பது அனைவரிடத்திலும்
சிரித்துக்கொண்டு இருப்பது அல்ல.
தனிமையில் இருக்கும்போதும்
எந்த வித கவலையுமின்றி இருப்பது தான்.
நேர்மறை சிந்தனை உள்ளவனை
விசத்தால் கூட கொல்ல முடியாது.
எதிர்மறை சிந்தனை உள்ளவனை
மருந்தால் கூட காப்பாற்ற முடியாது.
வயதை கடந்து வருபவர்கள்
எல்லாம் அனுபவசாலிகள் இல்லை
வலிகளை கடந்து வருபவர்கள் தான்
அனுபவசாலிகள்.
சொந்தம் என்பது சுண்ணாம்பு மாதிரி
அளவாக இருக்க வேண்டும்.
அளவுக்கு அதிகமான வாய் வெந்துவிடும்
வாழ்க்கை நொந்துவிடும்…!
தேடாத போது கிடைப்பதும்…!
தேடும் போது தொலைவதும்
வாய்ப்புகள் மட்டும் அல்ல
வாழ்க்கையும் தான்…!
அறிவுரையால் ஆளானவர்களை விட,
அலட்சியத்தால் அழிந்தவர்கள் அதிகம்..!
No Comment! Be the first one.