உன்னால்தான் என் பாதம்
இம்மண்ணிலே பதிந்தது
உன்னால்தான் என் பெயரும்
இத்தரணியில் உதித்தது
என் வாழ்வில் சூரியனாய்
மணம் வீசும் மல்லிகையாய்
எமக்காக வாழ்கின்றாய்
எம் இருவிழி தெய்வமே
அன்னை அவள் அருகில்
தந்தை உம் துணிவில்
வேறேதும் கேட்கவில்லை
இந்தப் பூமி தரணியில்
உலகெங்கும் ஆயிரம் பேர்
கடவுள் நாமம் சொல்லி அழைக்க
எனக்கு மட்டும் என் கடவுள்
அப்பா என்ற சொல்லில் கிடைக்க
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
அப்பா