மஞ்சள் திருமேனி மல்லிகையின் மென்மை
கஞ்ச இடுப்புடையாள் கருநாக பின்னல்
அஞ்சும் விழிப்பார்வை அஞ்சுவிரல் பூவெண்டை
பஞ்சாய் பாதங்கள் படபடக்கும் மென்னிமைகள்!
கழுத்து வெண்சங்கு கடைந்த எழுலுடலே
பழுத்தும் கொய்யா பருவக்கனி மார்பில்
இழுத்து போர்த்தி எழில் தன்னை
அழுத்தி மறைத்தாலும் அடங்காதப் பேரிளமை!
மார்பில் சாயுங்கால் மயக்கத்தில் மனமுறையும்
கூர்ந்து இவள்பார்க்க கொட்டும் வியர்வையது
பார்த்த கணம்முதலே பைத்தியமு மாகிடுவர்
தேர்ந்தப் பேரழகி தேவதையோ சந்தேகம்!
முனிவனுக்கும் ஆசைவரும் முடிகொண்ட இறைவனுக்கும்
கனியுன்னும் நினைவும் கற்பனையும் கூட வரும்
பிணிபடும் உள்ளங்கள் பேராசை கொள்ளுதலால்
இனியொருத்தி இவள்போல இனிவேண்டாம் இப்புவியில்!
No Comment! Be the first one.