பகுத்தறி!

 

வானம் சிரிப்பது மின்னல்
வருத்த வெளிப்படல் இடியே
காணும் மழையது கண்ணீர்
கலங்கும் நிலையது மேகம்!

இயற்கை இயல்பின் முறையே
இதுதான் இயற்கை வரைமுறையே
செயற்கையில் இயலா கலையே
சிந்திக்க வியப்பு நிலையே!

வருணன் என்பார் பொய்யே
வான்மழை கடவுளி லையே
ஒருநிலை யடங்கா இயற்கை
ஒருகடவுள் என்பதும் பொய்யே!

கடலில் யானை தண்ணீர்
கடத்திப் போவதும் கதையே
காலமும் பகுத்தறி யென்று
கத்துகிறோம் யாம் இதையே!