நடைமுறை ஒன்றிய நாடகம்!

காலங் கரையும் காட்சியின் கோலம்
காணுது தலை வழுக்கை-அந்த
நாளும் வந்தால்
நாடகமுதுமை போடுது உடன்படிக்கை!

வாலும் தலையும் வஞ்சனை செய்ய
வளருது நோயி ருக்கை–அது
நீளும் நாளில் நித்தியமாகுது
நீண்ட ஒரு படுக்கை!

பொய்புலர் மேனியை புணரும் வலிகள்
புசித்திடும் மெது மெதுவாய்–ஒரு
மைகரை பரவிடும் மதிப்பினி லுடலை
மறைத்திடும் சிறு வடிவாய்!

கதையொரு காவியம் கடைநிலை காட்சியே
காணுதல் ஒரு முடிவும்–இது
நடைமுறை ஒன்றிய நாடக முடிவே
நடப்பது தான் இயல்பும்!