எழுதிப் பார்த்தேன் உன்பெயரை–அதில்
இணைத்துப் பார்த்தேன் என்பெயரை
கண்களில் பரவசம் கரைபுரள-பனித்த
கண்ணீர் திரண்டு இமைபுரள
அந்தோ மகிழ்ச்சி மனமுறைய–என்
அருகும் கூட கண்மறைய
வந்த மாமழை போலுனது–ஒரு
வரமோ இந்த புவிவரவு!
உறவுகள் என்பது பேரழகு–அது
ஒவ்வொரு நிலையிலும் மேலழகு
உறவில் திளைத்தல் சீரகு–அந்த
உறவின் முன்னது ஏதழகு!
ஒருதலைப் பூண்டது காதலுமே–அதை
உயிர்ப்பிக் கத்தானது வேண்டலுமே
இருதலை ஏற்பினில் இன்பமடி
ஏற்கநீ இரங்கிட வேண்டுமடி!
No Comment! Be the first one.