தழும்புகள் கூடிய மேனி
தடியிலை பார்க்க சோனி
உழுகிற பணியில் நித்தம்
உழலுது தெளியா சித்தம்!
முண்டசு கூட்டுள் தலையும்
முடிவற்ற பசியில் வயிறும்
தொண்டெனும் நோக்கில் உழைப்பு
தொடருது உழவன் பிழைப்பு!
வியர்வையில் குளிப்பது விதியே
விவசாயம் ஒன்றே கதியே
பயனிலை இவனுக்கு சொந்தம்
படைப் பதிவ னானந்தம்!
முதன்மைத் தொழிலிவன் பெருமை
முடிவிலை இவனுக்கு வறுமை
இதுதான் இவனுக்கு வாழ்க்கை
இதன் மீதேனோ வேட்கை!