கன்னம் நிரம்பிய முத்தக்குறி –அவள்
காதல் தொடங்கிய நித்தக்குறி
இன்னும் இனிக்குது நெஞ்சிலறி-இது
நேரம் வெளுக்குமுன் கொண்டவெறி!
அன்பின் பெருக்கத்தில் ஓடும்நதி–அது
ஆசைத் துவக்கத்தில் பாய்ந்தவிதி
என்னுடன் கலந்த இன்பரதி–நான்
இதைஎப்படிச் சொல்லுவேன் ஈதின்கதி!
நித்தப் புழுக்கத்தில் எந்தன்மனம்–எதிர்
நித்திய தேவைக்கே அந்தவனம்
சத்திய சோதனை இடையிடையே-அந்த
சாந்தியும் ஆகலை நடைமுறையே!
ஏக்கத்தில் இருக்குது மனமிரண்டு–அதை
கேட்கத்தான் இல்லையே ஊர்திரண்டு
ஆக்கத்தான் சேரனும் அவளுடலை-இது
ஆறறி வாரது பெருங்கடமை!
No Comment! Be the first one.