சமுதாயம், மற்றவர்போல்
இருக்கவே கற்றுத்தருகிறது ,
தனித்துவமாய் இருந்துவிட்டால் நகைபுரியப்பார்க்கிறது !!
மகிழ்வான நேரங்கள்
நல்ல ஞாபகங்கள் ஆகிறது
கடினமான நேரங்கள்
நல்ல பாடங்கள் ஆகிறது!!
அளவான சாப்பாடு
உடலுக்கு நன்மை
அளவோடு பழக்கம்
உறவுக்கு நன்மை!!
இன்றைய இலட்சியம்
நாளைய சாதனை
இன்றைய அலட்சியம்
நாளைய சோதனை!!
மனதின் வார்த்தைகளின்
எல்லைகளை பொறுத்தே
உறவுகளின் ஆயுட்காலமும்
அதிகரிக்கும்!!
வசதியென்பது
பணத்தில் மட்டும் இல்லை
மனசுக்கு நிம்மதியான வாழ்க்கையும்
வசதியான வாழ்க்கை தான்!!
மனதில் பட்டதை
சொல்லுங்கள்
ஆனால்
அடுத்தவர் மனம்
பட்டுபோகும்படி
சொல்லாதீர்கள்!!
வருவது வரட்டும்
போவது போகட்டும்
என்று இருந்தால் நிம்மதி
நிச்சயம் !!!
No Comment! Be the first one.