நீ அணிந்துள்ள நகை

நீ
அணிந்துள்ள
நகைகளிலேயே
நான் விரும்பும் நகை
உன் புன்னகை !
உன்
இந்த நகைக்கு
செய்கூலி இல்லை !
சேதாரம் உண்டு !
சேதாரம் ?
வேறென்ன
என் இதயம் தான் !
மூடி
வைக்கப்பட்டிருக்கும்
பொக்கிஷத்தில்
ஒரு நகைமட்டும்
ஒளிர்கிறது !
கண்களாலும்
புன்னகைக்க
உன்னால்தான்
முடியும் !
சிரிப்பு எனும்
மழை நின்றபிறகும்
புன்னகை என்ற
தூவானம் நிற்பதில்லை
மகள் முகத்தில் !
நீயெழுதும்
புன்னகை என்ற
கவிதைக்குத்
தலைப்பு
உன் கண்கள்தானே ?
காத்திருக்கிறேன்..
கண்ணாடி
உன் பிம்பத்தைத்தான்
காட்டுகிறது !
உன்
புன்னகை தான்
உன்னைக்காட்டும் !
ஆனையூராள்
May be an image of 2 people