இரவும் பகலும் எண்ணருந் தோழர்
இலட்சிய உழைப்பின் மிகுதி
வருமெதிர் காலம் வல்லர சன்றோ
வலிய உழைப்பாலிந்த தகுதி!
பல்தொழில் புரிவோர் பன்நோக்குடையோர்
பாட்டில் வளருது நாடு
உள்நோக் கின்றி உழைப்போர் வலிமை
உரிமையைப் போற்றிப் பாடு!
ஏழ்மை அகல எளியோர் சிரிக்க
எழுதுவோம் இன்றொரு கவிதை
வாழ்வோர் மேநாள் வந்தனம் செய்வோம்
வளமையில் இந்தப் பொழுதை!
தாழா துழைப்போன் தரணியில் சிறக்க
தருவோ மினியும் உழைப்பை
பாழாய்ப் போன பிரிவினை யாவையும்
பதுக்கி யொழிப்போம் குப்பை!
No Comment! Be the first one.