உயிர்களின் பண்பாடு!

உள்ளம் தெளிந்த ஓர்நிலை அதுதான்
உண்மையில் மெய்ஞானம்
கள்ள மிருத்திய கலை களில் ஒளிர்வது
காலத்தின் அவமானம்!

நன்மை தீமை நயப்பட பகுப்பது
நம்மவர் வரலாறு
தன்மைக் கேற்ப
தளந்தனை அமைப்பது
தமிழரின் பெறும்பேறு!

வாழுவர் வாழ
வழிதனை கொள்வது
வழித்தடை அறியாது
தாழுணர் வோடு
தன்னலம் எனில்பல
தடைதனால் பெருங்கேடு!

உள்ளு வதோடு உவத்தலில் இருக்குது
உயிர்களின் பண்பாடு
எல்லாம் கருணை
இரக்கம் பரிவு
என்றதன் விழிப்போடு!